spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்ன இருக்கிறது முதலமைச்சரின் "தடம்" பரிசுப்பெட்டகத்தில்?

என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?

-

- Advertisement -

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள்

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :

  • திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
  • விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
  • நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
  • பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
  • புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
  • கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு

 என்ன இருக்கிறது முதலமைச்சரின் "தடம்" பரிசுப்பெட்டகத்தில்?

we-r-hiring

தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சி, ‘தடம்’.

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் உருவாக்கப்பட்டது ‘தடம்’ திட்டம்.

பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்.

அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்

’தடம்’ திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை அளித்து வருகிறார்.

MUST READ