Homeசெய்திகள்தமிழ்நாடுகருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற பெயர் ஏன்?

கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற பெயர் ஏன்?

-

கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்ற பெயர் ஏன்?

மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு கலைஞர் என்ற புனைப்பெயரை வைத்தது யார்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1969 முதல் 2018 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு அதிகம். இவருக்கு ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார் என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பட்டத்தை அளித்தது ஒரு சாதாரண கூலித் தொழிலாளிதான் என்று சொன்னால் நம்ப முடியுமா?

ஆம்… நடிகவேல் என்ற நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக பணியாற்றிய பாஸ்கரன் என்பவர் தான். அண்ணாவுக்கு அறிஞர் என்ற புனைப்பெயர் இருப்பது போன்று கருணாநிதிக்கு கலைஞர் என்ற புனைப்பெயர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என யோசனை கூறியுள்ளார். நாடகத்தின் விளம்பர தட்டிகளை எழுதுவது பாஸ்கரனின் வேலை. அவர் தான் முதன்முதலில் கலைஞர் கருணாநிதியின் தூக்குமேடை என விளம்பரத் தட்டியில் எழுதியவர் ஆவார். அதைப் பார்த்துத் தான் நடிகவேள் தனது உரையில் கலைஞர் கருணாநிதி என பேசத் தொடங்கினார்.

ஒரு கூலித்தொழிலாளி வைத்த கலைஞர் என்ற பெயர் பட்டித்தொட்டியெல்லாம் பரவி இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இன்று கலைஞர் என்றால் உலகத்திலேயே கருணாநிதியை தவிர வேறு யாரும் நினைவுக்கு வரமாட்டார்கள் என்ற அளவிக்கு நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சரி அந்த பெயர் அவருக்கு பொருத்தமானதுதானா என சிலர் யோசிக்கலாம். ஓடி ஆடி விளையாடும் வயது 14. அந்த வயதில் மாணவர் நேசன் என்ற இதழை தொடங்கினார் கலைஞர். அந்த வயதிலேயே மாணவர் நேசன் இதழில் எழுத தொடங்கினார். அதோடு நின்றுவிடவில்லை அவரது எழுத்து பயணம். 15 வயதில் முரசொலியை தொடங்கினார். அதில் வந்த கலைஞரின் கட்டுரையை படித்துவிட்டு அறிஞர் அண்ணாவே வாயடைத்து போனாராம். யாருப்பா இந்த பையன்? என அவரே கேட்கும் அளவுக்கு இருந்ததாம் அந்த கட்டுரை.

கருணாநிதியின் அந்த எழுத்துதான் பெரியாரிடமும், சிவாஜியிடமும், எம்ஜிஆரிடமும் பழக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கோடாடான கோடி உடன்பிறப்புகளையும் சம்பாதித்தது. சாதராண இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து, எழுத்து திறமையால் திரையுலகை கட்டிப்போட்ட கலைஞர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை விர்ல் நுனியில் வைத்திருந்த அவருக்கு கலைஞரை தவிர வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்பது கேள்வி குறியே!

 

 

MUST READ