spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி

ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? சத்யராஜ் கேள்வி

-

- Advertisement -

sa

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட சதி நடந்தது என்று ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

we-r-hiring

a

உயர் பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இப்படி பேசுவது அழகல்ல என்கிறார் அதிமுகவின் மூத்த நிர்வாகி கேபி முனுசாமி. தனது வேலையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார் ஆளுநர் . அவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் பொதுவெளியில் இப்படி பேசுவது தவறு என்று திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ், ஆளுநர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. ஆளுநர் இப்படி நடந்து கொள்ள வேண்டியது இல்லை. நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக தான் செயல்பட வேண்டும். அதற்கு ஆதரவாக மக்கள் நலனே முக்கியம் என்றது கருத்தில் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கோவையில் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை திறந்து பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சத்யராஜ் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

MUST READ