
விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று (நவ.06) காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வந்தது.
விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் பணியில் துரிதமாக ஈடுபட்டு சரி செய்தனர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நீல வழித்தடத்தில் தற்போது மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!
பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களில் எதிர்பாராத காலகட்டத்தில் திடீர் என்று ஏற்படும் தடங்கல்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மெட்ரோ பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.