
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு
தேர்தலின் போது அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் எனக் கூறிவிட்டு தற்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் எனக் கூறுகிறார்கள். விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை (ஜூலை 20) நடைபெறும் போராட்டத்தில் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தியதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நடத்தியது எனக் கூறுவது தவறு.
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது
தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி. எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.