spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏற்காடு விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஏற்காடு விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

ஏற்காடு மலைப்பகுதி விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து துயரத்துக்குள்ளானேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிச் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ