இனி ரேசன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று, ஈராண்டுகள் நிறைவடைந்தததையொட்டி, அதனை சிறப்பிக்கின்ற வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 365 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை கடந்த இரண்டாண்டுகளில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமன்றி, புதிதாகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் முதல்வர் அறிவித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ரூ.513.00 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ததும் தமிழகத்தில் 16,08,614 விவசாயிகள் பெற்ற மொத்தம் ரூ.12,110.00 கோடி மதிப்பீட்டில் விவசாய கடனும் தள்ளுபடி செய்தது உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டாண்டுகளில் சிறப்பாக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.

தமிழகத்தினை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருவதாக அமைச்சர் பேசினார் தொடர்ந்து அமைச்சர் KR பெரிய கருப்பன் அளித்த பேட்டியில் கூட்டுறவு வங்கிகளிலும் பண பரிவர்தனைக்கு QR கோடு மூலமாக இணைய பரிவர்த்தனை காஞ்சிபுரத்தில் திட்டத்தை துவக்கப்பட்டது. ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டபடி தமிழகம் முழுவதும் இணைய வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மூன்று மாதங்களில் பண பரிவர்த்தனைக்கான QR கோடு முறை அமல்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் (கேழ்வரகு )குடும்ப அட்டைகளுக்கு இரண்டு கிலோ விதம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு தேவையான சிறு தானியங்கள் மொத்தமாக கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.