Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றால அருவியில் அடித்து சென்ற 4 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

குற்றால அருவியில் அடித்து சென்ற 4 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

-

- Advertisement -

குற்றால அருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது சிறுமியை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 100 அடி பள்ளத்தில் இறங்கி போராடிக் காப்பாற்றிய தூத்துக்குடி இளைஞரை, மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினர்.

குற்றாலம்

we-r-hiring

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். விஜயகுமார் காரில் கடந்த 29ஆம் தேதி பழைய குற்றாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குளித்துவிட்டு திரும்பும் போது பழைய குற்றால அருவியில் வெள்ளத்தில் நான்கு வயது பெண் குழந்தை அடித்து செல்லப்படுவதை கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதை கண்டார்.

உடனே இளைஞர் விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் 100 அடி பள்ளத்தில் தண்ணீர் அதிகமாக சென்ற பாறைகள் நிறைந்த பள்ளத்தில் இறங்கி துணிச்சலுடன் நான்கு வயது பெண் குழந்தையை காப்பாற்றினார். காப்பாற்றப்பட்ட பெண் குழந்தை தமிழக கேரளா மாநில எல்லை பகுதியான பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்பது தெரிய வந்தது. குழந்தையை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் தன் உயிரையும் துச்சம் என நினைத்து நான்கு வயது பெண் குழந்தையை காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரது வீர தீர செயலை பாராட்டி சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார்.

MUST READ