spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்Uttarakhand Accident - 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 போ் உயிரிழப்பு.

Uttarakhand Accident – 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 போ் உயிரிழப்பு.

-

- Advertisement -

உத்தரகாண்ட் மாநிலத்தில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது – பலத்த காயமடைந்த 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Uttarakhand Accident - 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 36 போ்  உயிரிழப்பு.

we-r-hiring

உத்தரகாண்ட மாநிலம் கார்வாலில் இருந்து குமாவோனுக்கு 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து அல்மோராவில் உள்ள மாரச்சுலா எனும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருநூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மீட்பு படையினரை அனுப்பி மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் ஒற்றைத் தலைவலியும் அதன் தீர்வுகளும்!

படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதற்காக ஹெலிகாப்டர் வசதிகளும் மாநில அரசு வழங்கியுள்ள நிலையில் இதுவரை 36 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதில் நான்கு பேர் தீவிர சிகிச்சை தேவை என்பதால் ஹெலிகாப்டர் உதவியுடன் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற வரக்கூடிய நிலையில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

MUST READ