வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் வானிலை மோசமடைந்துள்ளதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கனமழை பெய்து, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

கடல் சீற்றம் காரணமாக சென்னை காசிமேட்டில் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் வழக்கமாக அமைதியாகக் காணப்படும் கடல், தற்போது கடும் அலைச்சலுடன் காணப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையைப் பின்பற்றி, காசிமேடு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் மரப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல், தங்களது படகுகளில் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், சிறிய படகுகளில் உள்ள மீனவர்கள் மட்டுமே கரையிலிருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று சிறிய அளவில் மீன் பிடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு திசையில் இருந்து நகரும் மேகக் கூட்டங்களால், நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பதிவாகி வருகிறது. மேலும், கிழக்கு திசையில் இருந்து நகரும் மேகக் கூட்டங்களின் தாக்கத்தால், சென்னையின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
‘காந்தாரா சாப்டர் 1’ இங்கிலீஷ் வெர்ஷன் ரிலீஸ் தேதி இதுதான்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


