spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைவானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளாா்.வானிலை அறிக்கை: டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு!வடக்கு டெல்டாவில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் மயிலாடுதுறை ,காரைக்கால், நாகப்பட்டினம் ,திருவாரூர் , தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பரவலாக மாலை மற்றும் இரவவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறுவை விதைத்தவர்களுக்கு சாதகமான மழையாக அமையும்.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த் இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாலை மற்றம் இரவில் இடி, மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம். இம்மழை சென்னையில் கோடையின் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கும்.

we-r-hiring

வடமாவட்டங்கள்: வடகோடி மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இராணிப்பேட்டை ,வேலூர் ,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம் ,கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாலையில் மிதமான மழையும் இரவு இடியுடன் கூட கனமழை பதிவாகும். தெற்கே புதுக்கோட்டை ,சிவகங்கை ,மதுரை ,திண்டுக்கல் ,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் சுழலும் சக்கரம்.. காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கொட்டும் மழை.. பிரதீப் ஜான் கணிப்பு

MUST READ