பெங்களூரில் உள்ள பெண் ஒருவர், தனது கணவர் துன்புறுத்துவதாகவும், அமானுஷ்ய சடங்கில் தங்கள் குழந்தையை பலிகொடுக்க வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கோரினார்.
குடும்பத்திற்கு செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் நோக்கில் நடத்தப்படும் ‘குட்டி பூஜை’ என்ற சடங்கில் தனது இளம் குழந்தையை பலி கொடுக்க தனது கணவர் சதாம் முயற்சிப்பதாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
கே.ஆர்.புரம் காவல் நிலையத்தில் புகாரை ஏற்காததால் அவசர புகாராக கே.ஆர்.புரத்தை சேர்ந்த அந்தப் பெண்பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.
அந்தப் பெண்ணின் புகாரின் படி, ‘‘தான் ஒரு கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சதாமை முதலில் சந்தித்தேன். அவர் தன்னை ஒரு இந்து புனிதரான ‘ஆதி ஈஸ்வர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னை ஏமாற்ற அவரை இந்துவாகக் காட்டிக் கொண்டுள்ளார்.
இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட போதிலும், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதானார். “முஸ்லீம் திருமண சான்றிதழில்” வலுக்கட்டாயமாக கையொப்பமிட வைத்தார். நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்காக எனது பெயரை மாற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.
அப்போதிலிருந்து “துஷ்பிரயோகம் தீவிரமடைந்துள்ளது” என்றும், நான் கர்ப்பமானபோது, ஆதி ஈஸ்வர் என்ற சதாம், என்னை உடலளவில் தாக்கத் தொடங்கினார். எங்களுக்கு மகன் பிறந்ததைத் தொடர்ந்து, சதாமின் கொடூர செயல்கள் அதிகரித்தன. எனது மகனை ‘குட்டி பூஜை’ என்ற சூனியத்தில் பலி கொடுப்பதாக பலமுறை மிரட்டியுள்ளார்.
இந்த சடங்கை அவர் வற்புறுத்தியதால் பதற்றமடைந்த எனது மகனுடன் தும்கூரில் உள்ள எனது தாய் வீட்டிற்கு தப்பிச் சென்றேன். சதாமை விலகிச் சென்ற போதிலும் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினார். அவர் எனது தாயையும் மிரட்டினார்.
சதாம் அமானுஷ்ய நடைமுறைகளில் ஈடுபட்டு வந்தார். இரவில் மந்திரங்களை உச்சரிப்பது உட்பட, அவர் செய்தது பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது குறித்து முதலில் கேஆர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அங்கு எனது புகார் ஏற்கப்படவில்லை’’ என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
விரக்தியடைந்த அவர், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தத்தை அணுகினார், உயர் அதிகாரிகள் தனது அவலநிலையை கவனிப்பார்கள் என்று நம்பினார். அவர் தனது மகன் மற்றும் தாயின் பாதுகாப்புக்கு பயந்ததால், போலீஸ் பாதுகாப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.