தமிழ் நாட்டில் இபிஎஸ் தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளாா்.
சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜகவினர் சந்தித்தனர். பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில், பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். காலை விருந்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்ட கால நண்பர் என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். அதுமட்டுமல்லாமல், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளாா். மக்களிடம் வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

பியூஷ் கோயல் எனது இல்லத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெரிய மாற்றத்துக்கான கூட்டமாக நாளைய பொதுக்கூட்டம் அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா…புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…


