என்.டி.ஏ கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளாா்.
அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நேற்று வரை எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று விமர்சித்த டிடிவி தினகரன் அவருடன் மேடை ஏறி எப்படி வாக்கு கேட்கப் போகிறார். என்.டி.ஏ கூட்டணியில் இணைந்த பிறகும் கூட எடப்பாடியின் பெயர் சொல்லவே தயங்குபவர் எப்படி அவருடன் அரசியல் செய்யப் போகிறார்.
மோடி ஒரு முறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாஜகவின் படையேடுப்பை தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர மறுக்கும் பாஜக அரசு, அதிமுகவுடன் சேர்ந்து தமிழகத்தில் எப்படி வாக்கு கேட்கப் போகிறது? மூழ்கும் கப்பலான அதிமுக – பாஜக கூட்டணிக்கு யார் சென்றாலும் அவர்களும் மூழ்குவார்கள் என செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளாா்.
தமிழ்நாடு மீனவா்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர்


