பிரேசிலில் உள்ள கொரியா பின்டோவில் சவப்பெட்டியில் 8 மாத பெண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கியாரா கிரிஸ்லேன் என்ற குழந்தை, வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை ஒன்று இறுதிச்சடங்கில் தனது சவப்பெட்டியில் நகர ஆரம்பித்துள்ளது. குடும்ப உறுப்பினரின் விரலை பிடித்த நிலையில் குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மீண்டும் இறந்தது. குடும்பத்தினர் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே உடைந்துவிட்டோம், பின் கொஞ்சம் நம்பிக்கை வந்தபோது இப்படி நடந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆறுதல் கூறியதுடன், இறப்பு அறிக்கைகள் தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். அதே சமயத்தில் கியாராவின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோறியுள்ளனர்.
மேலும் பிரேசில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனை மரண அறிக்கைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் பெட்டிகளுடன் இணைக்கும் கப்ளிங் உடைந்ததால் தனியாக சென்ற என்ஜின்… காட்பாடி அருகே பரபரப்பு