spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்

மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்

-

- Advertisement -
மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்
அமெரிக்காவில் மெட் காலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து அணிவகுத்தது அனைவரையும் கவர்ந்தது.

மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆடை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஆணடுதோறும் மெட் காலா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான உடைகள் அணிந்து அணிவகுப்பர்.

we-r-hiring

இதற்காக ஹாலிவுட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் இணைந்து ஆடைகளை தயாரித்தனர்.மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்டை நினைவுகூரும் வகையில் நடப்பாண்டு மெட் காலா நடைபெற்றது. இவர் வளர்த்த பூனை ஹாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம் என்பதால் அமெரிக்க நடிகர் ஜாரெட் லெட்டோ பூனை உடையில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.

மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்கர்ப்பிணியாக உள்ள பாடகி ரிஹான்னா வெள்ளை நிற உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். இதில் தனது கணவருடன் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கலந்துக்கொண்டார்.அப்போது தான் கருவுற்று இருப்பதை அவர் அறிவித்தார்.

அமெரிக்க நடிகர் ஜெர்மி போக் 30 அடி நீளமுடைய உடையை அணிந்து வந்தார். இதில் கருப்பு வெள்ளை நிறத்தில் கார்ல் லாகர்ஃபெல்ட் உருவம் அச்சிடப்பட்டிருந்தது. 5,000 மீட்டர் துணி இந்த ஆடையை தயாரிக்க தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மெட் காலா நிகழ்ச்சியில் அணிவகுத்த பிரபலங்கள்

இதில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஆலியா பட், வெள்ளை நிற உடை அணிந்து வந்தார்

MUST READ