சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள நிலையில், குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் பயிற்சி மையங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், நடப்பாண்டில் ஆயிரம் பேருக்கு 6.72 சதவிகிதத்துக்கும் கீழ், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து பதிவாகி உள்ளது. பொருளாதார நெருக்கடி, குழந்தை பராமரிப்பு, வளர்ப்பு செலவீனம் உள்பட காரணிகளால், சீனர்கள் மத்தியில் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணம் சிதைத்துள்ளது. இந்நிலையில் ஷாங்காய் உள்பட நகரங்களில், குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. அங்கு, பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்து குழந்தைகளை பராமரிப்பது குறித்து அதிக கட்டணத்தில் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதில் குழந்தை பிறந்தது முதலே, தாலாட்டுவது, பால் ஊட்டுவது, குளிப்பாட்டுவது உள்பட வளர்ப்பு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் மகளிர் காப்பாளர்கள் மட்டுமின்றி குழந்தைகளை பெற்ற தாய்மார்களும் பங்கெடுத்து பயன்பெறுகின்றனர்.

சீனாவில் நிறைய தம்பதியர் போதிய பராமரிப்பாளர் கிடைக்காததால் குழந்தைகளின் பிறப்பை தள்ளிப்போடுவது தொடர்கிறது. பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு பணிக்கு செல்லும் பிள்ளைகளாலும், குழந்தை வளர்ப்பு என்பது எட்டாகனியாக மாறி வருகிறது. இந்நிலையில் பயிற்சி பெற்ற காப்பாளர் பெண்களுக்கு சீனர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதிக கட்டணத்தில் பயிற்சி எடுத்து, குழந்தைகள் பராமரிப்பு பணிக்கு செல்வதற்கு, சீன பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


