Homeசெய்திகள்உலகம்ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை

ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை

-

ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை
ஒரு கிலோ கஞ்சா கடத்த சதி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் தூக்கிடப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தலை தடுக்க கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது . அந்நாட்டிற்குள் மலேசியாவில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை கடத்த திட்டமிட்ட வழக்கில் கைதான தமிழரான தங்கராஜூ சுப்பையா என்பவர் குற்றவாளி என 2013 ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2018 ஆம் ஆண்டு நாட்டின் சட்ட விதிகளின்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் கருணை அடிப்படையில் அவரது தண்டனையை குறைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.

ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை

தொடர்ந்து இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அவரது குடும்பத்தினர் போராடி வந்த நிலையில் அந்நாட்டின் சாங்கி சிறையில் தங்கராஜூ தூக்கிடப்பட்டுள்ளார்.

கடைசியாக அவரது தண்டனையை குறைக்க வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தங்கராஜூவை பார்க்க அவரது தாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாள் அவர் தூக்கிடப்பட்டுள்ளார்.

ஒரு கிலோ கஞ்சா கடத்த திட்டமிட்டதற்காக மரண தண்டனை

கடந்த ஆறு மாதங்களில் அந்நாட்டில் வழங்கப்பட்ட முதல் மரண தண்டனை இதுவாகும். கடந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய 11 பேர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ