
சீனாவில் அமைச்சர்களும், தலைமை அதிகாரிகளும் அண்மைக் காலமாக காணாமல் போவதும், பதவி நீக்கப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. இதற்கு காரணம், சீன அதிபர் ஷி ஷின்பிங்-கின் தூய்மைப்படுத்தும் திட்டமா?, பலமிக்கவர் உருவாவதைத் தடுக்கும் வியூகமா? என விரிவாகப் பார்ப்போம்!
“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கியூன் காங், கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அதே மாதத்தில் சீன ராக்கெட் படைப்பிரிவு கமாண்டர் ஜெனரல் லீ யாசோ திடீரென காணாமல் போனார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீன ராணுவ அமைச்சர் லீ ஷாங்கு தொடர்பு எல்லைக்கு வெளியே போனார்.
2022- ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கத்தின் போது, நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் முக்கிய கூட்டத்தில், அதிபர் ஷி ஷின்பிங்- களால் பார்த்து பார்த்து தேர்வுச் செய்த நெருக்கமான வட்டாரம் இவர்கள். அந்த கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய விதியை ஷி உடைத்தெறிந்ததும் நடந்தது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!
ஒருவர் இரண்டு முறை மட்டுமே தலைமை பதவியை வகிக்க முடியும் என்ற விதியை மாற்றி, மூன்றாவது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷி. சீன அதிபர், ராணுவ பதவி உள்ளிட்ட பதவி ஷி வசம் உள்ளது. இந்த நிலையில், அதிபர் ஷி ஷின்பிங்- க்கு நெருக்கமான மூன்று பேர் அடுத்தடுத்து, காணாமல் போக, கட்சித் தரப்பிலோ, அரசு தரப்பிலோ எந்த விளக்கமோ வெளியாகவில்லை.