Homeசெய்திகள்உலகம்இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்

-

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்

இஸ்ரேலில், ஆளும் நேதன்யாகு அரசு நீதித்துறையில் மேற்கொள்ள இருக்கும் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ்-ல் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலில் நீதிமன்ற தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கிடும் வகையில் நீதித்துறையில் புதிய சட்டங்களை கொண்டு வர பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பலவீனப்படுத்தப்பட்டு, நீதிபதிகளின் சுதந்திரம் பறிக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 10வது வாரமாக நேற்றும் தலைநகர் டெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் சிவப்பு நிற உடையில் பங்கேற்ற டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே பிரதமர் நேதன்யாகு நீதித்துறையில் இத்தகைய சட்டத்திருத்தங்களை கொண்டு வந்திருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என வலியுறுத்தியுள்ளனர்.

MUST READ