spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு

-

- Advertisement -
அமெரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட வாய்ப்பு
அமெரிக்க முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க

தொழில் அதிபரான அவர் 2006 ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகை உடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் இந்த விவகாரம் வெளியே வராமல் இருக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் நடிகைக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வருகிறது.

we-r-hiring

இந்த வழக்கில் குற்ற செயலில் ஈடுபட்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ள டிரம்ப் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்க

டிரம்ப் கைது செய்யப்படலாம் என அச்சமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ