spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்

கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்

-

- Advertisement -
கூகுள் ஊழியர்கள் லண்டனில் போராட்டம்
ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

கூகுள்

பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி வந்த மசாஜ், கபே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் அலுவலகங்களில் இனி ஸ்டேபிளர் செல்லோ டேப்கள் கூட வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே கடந்த ஜனவரியில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த நிலையில் கூகுளின் இந்த முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கூகுள்

இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் அச்சத்தில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பணியை புறக்கணித்து லண்டனில் உள்ள தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாகைகள் பிடித்தும், கரகோஷம் எழுப்பியும் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கத்தினர் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் நிறுவனம் செவி சாய்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

MUST READ