Homeசெய்திகள்உலகம்"பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது"- ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை!

“பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது”- ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை!

-

 

"பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சாரம் கிடையாது"- ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை!
File Photo

பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் மின்சார விநியோகம் கிடையாது என்று ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் அவசர கால ஒருங்கிணைப்பு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படைக்களுக்கு இடையிலான போரில் இருதரப்பிலும் 2,200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர், பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இதில்,இஸ்ரேல் ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் அடங்குவர். பணயக் கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேல் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இஸ்ரேலில் அவசரகால ஒருங்கிணைப்பு அரசு!

இந்த சூழலில், பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவுக்கு மின்சார விநியோகம் செய்ய மாட்டோம் என்று இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு நிபந்தனை விதித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடி தாக்குதலால், காசா நகரமே நிலைக்குலைந்திருக்கும் நிலையில், இடிந்து கிடக்கும் கட்டடங்களுக்குள் ஏராளமான சடலங்கள் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ