
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில், இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவைக் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு கசியவிட்டுள்ளது.

மனிதர்கள் வழியாக சேகரிக்கப்பட்ட உளவு தகவல் மற்றும் செல்போன், இ-மெயில் பரிமாற்றம் செல்போனை ஒட்டுக்கேட்பது உள்ளிட்ட சிக்னல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக, இந்தியா மீது கனடா அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
அதேபோல், கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் 5 ஐஸ் இண்டலிஜென்ஸ் குழுவைச் சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவுத் தகவலை கனடாவிற்கு வழங்கியுள்ளதாக தகவல் கசிய விடப்பட்டுள்ளது. இந்த உளவுத் தகவல்கள் காரணமாகவே நிஜ்ஜார் மரணத்திற்கும், இந்திய அரசிற்கும் தொடர்புவிருப்பதாக, கனடா உளவுத்துறைக் கண்டறிந்து உள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..
இந்தியா- கனடா மோதலில் 5 ஐஸ் இண்டலிஜென்ஸ் அமைப்பு, இந்தியாவிற்கு எதிரான விசாரணையைக் கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாகக் கூட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இதில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


