Homeசெய்திகள்உலகம்எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்

எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்

-

எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்

எகிப்தில் சிரிக்கும் முக வடிவமைப்பை கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரோ கோவிலில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்போது சிரிக்கும் முகவடிவமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.இச் சிலைகள் பண்டைய ரோமானியப் பேரரசின் பிரதிநிதித்துவமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சிலைகள் கிசா பிரமிடுகளில் உள்ள ஸ்பிங்ஸ் சிலைகளை விட அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் இதுவரை உணர்ச்சியற்ற சிலைகளையே கண்டெடுத்ததாகவும், முதன்முறையாக சிரித்தபடி உள்ள சிலைகளை கண்டுபிடித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 

MUST READ