- Advertisement -
பிரான்ஸ் நாட்டின் நீளமான ஆற்றில் வறட்சி
பிரான்ஸ் நாட்டில் உள்ள நீளமான ஆற்றில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
மழை பொய்த்ததால் பிரான்ஸ் நாட்டின் நீளமான ஆறு வறண்டு காட்சி அளிக்கிறது. பிரான்ஸ் நாட்டிலேயே மிக நீளமான ஆறாக கருதப்படுவது லோய்ரே ஆறு. உலகிலேயே 171-வது நீளமான ஆறு இதுவாகும். சுமார் ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து ஓடும் இந்த லோய்ரே ஆறு கடுமையான வறட்சி காரணமாக வறண்டு காணப்படுகிறது. பனிக்காலத்தை தொடர்ந்து, அந்நாட்டில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது.

1959-ம் ஆண்டுக்கு பிறகு 2023-ம் ஆண்டில் தான் இந்த அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த ஆண்டில் மழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல், பொய்த்துப் போனதால் ஆறு வறண்டு போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. லோய்ரே ஆற்றின் இந்த நிலை தங்களை அச்சம் கொள்ள வைப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.