- Advertisement -  
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உண்டு. இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது, இது சட்டவிரோதம், இது குற்றச்செயல் இது போல விதிமுறைகளும், சட்டங்களும் உண்டு. இந்தியாவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது சட்டவிரோதம். ஆனால், தாய்லாந்தில் கஞ்சாவை பயன்படுத்தி உணவே தயாரிக்க அரசே அனுமதி அளித்துள்ளது. இது போல நாடுகளுக்கு நாடு விதிமுறைகள் மாறும். ஆனால், ஒரு நாட்டில் அனுமதி இல்லாமல் இறந்து போவது சட்டவிரோதம்.

நார்வே நாட்டின் லாங்கியர்பைன் எனும் சிறிய நகரத்தில் தான் இறந்து போவது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. அந்த நகரத்தில் யவருமே இறந்து போக அனுமதி இல்லை. இந்த சட்டம் பல ஆண்டுகளாக நடைமுறைல் உண்டு. பல ஆண்டுகளாக மக்களும் பின்பற்றி வருகிறார்கள்.


இந்த நகரத்தில் பனி பொழிந்துகொண்டே இருப்பதால், மிகவும் குளிராக இருக்குமாம். அதிக குளிராக இருப்பதால, இங்க இறப்பவர்களின் உடல்கள் அழுவது கிடையாது. அதுமட்டுமில்லாமல், பத்து இருபது வருடங்கள் ஆனாலும், அவர்களின் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளும் உயிரோடு இருப்பதாகவும் ஒரு ஆராய்ச்சில் தெரிய வந்துள்ளது.



