spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஓமன் நாட்டிற்கு சென்ற நாமக்கல் முட்டை நடுக்கடலில் தவிக்கிறது - வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை

ஓமன் நாட்டிற்கு சென்ற நாமக்கல் முட்டை நடுக்கடலில் தவிக்கிறது – வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை

-

- Advertisement -

ஓமன் அரசிடம் உடனே பேசி பிரச்சினையை தீர்க்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் திமுக எம்பி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஓமன் நாட்டிற்கு சென்ற நாமக்கல் முட்டை நடுக்கடலில் தவிக்கிறது - வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கைடெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

we-r-hiring

அதில் சமீபத்தில் ஓமன் அரசு இந்திய முட்டைகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறைந்தபட்ச முட்டையின் எடை 60 கிராம் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை 52 கிராம் உள்ளது.

இதனால் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய முட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு, தற்போது நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓமன் அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்து, நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களுக்கு உதவும் வகையில் இப்பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா விடுதலை 2? …. திரை விமர்சனம்!

MUST READ