Homeசெய்திகள்உலகம்சூடான் கலவரத்தில் இந்தியர் பலி - ஜெய்சங்கர்

சூடான் கலவரத்தில் இந்தியர் பலி – ஜெய்சங்கர்

-

சூடானில் இந்திய பிரஜை ஒருவர் தவறான தோட்டாவால் காயமடைந்து உயிரிழந்ததாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினால் கார்டுமில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சூடான் தலைநகரமான கார்டுமில் பதற்றம் தொடர்வதால் இந்திய பிரஜைகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தூதரகம் முன்பு அறிவுறுத்தியது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இந்திலையில் இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆல்பர்ட் அகஸ்டின் சூடானில் உள்ள ”டால் குரூப்” நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய நாட்டவர்.

ஆல்பர்ட்-ன் குடும்பத்திற்கு முழுமையான உதவிகளை வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது தூதரகம் எனவும் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது”.

மேலும் “கார்டுமில் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது முன்னேற்றங்களை பற்றி நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் இரங்களில்  தெரிவித்துள்ளார்”.

சனிக்கிழமை அன்று ஒரு ட்வீட்டில் தூதரகம் எழுதியது ”அறிவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களை கருத்தில் கொண்டு அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். வீட்டிற்குள்ளேயே இருக்கவும் உடனடியாக வெளியில் செல்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள் மற்றும் நிலைமைகள் மாறும் வரை காத்திருங்கள்”

தகவல்களின்படி, சூடானில் சனிக்கிழமை வன்முறை வெடித்தது, இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் அவரது துணை இராணுவத் தளபதி மொஹமட் ஹம்தான் டாக்லோ இடையே, இராணுவத்தில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளை ((Rapid Support Forces – RSF )) திட்டமிடுவது தொடர்பாக பல வாரங்களாக பதட்டங்கள் அதிகரித்தன.

துப்பாக்கிச் சூடு சத்தம் விமான நிலையம் மற்றும் கார்ட்டூம் வடக்கு பகுதியில் உள்ள புர்ஹானின் குடியிருப்பு அருகே  கேட்டுள்ளது. பீரங்கி சத்தம் உலுக்கியதால், உள்ளூர்வாசிகள் மறைவதற்காக ஓடி உள்ளனர்.

“விரைவு ஆதரவுப் படையைச் சேர்ந்த போராளிகள் கார்ட்டூம் மற்றும் சூடானைச் சுற்றியுள்ள பல இராணுவ முகாம்களைத் தாக்கினர்” மேலும் “மோதல்கள் தொடர்கின்றன, நாட்டைப் பாதுகாப்பதில் இராணுவம் தனது கடமையைச் செய்கிறது,” என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் நபில் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தலைவர் புர்ஹான், RSF தளபதியுடன், நாட்டை சிவில் ஆட்சிக்கு திருப்புவதற்கான ஒப்பந்தத்தை முடிப்பதற்கும், அவர்களின் 2021 ஆட்சிக் கவிழ்ப்பினால் ஏற்பட்ட நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. RSF ஐ வழக்கமான இராணுவத்தில் ஒருங்கிணைக்கும் திட்டம் சர்ச்சைக்குரிய முக்கிய புள்ளிகளில் ஒன்றாகும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூடான் இராணுவம், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “நாடு ஆபத்தான வரலாற்று திருப்பு முனையில் இருப்பதால் எச்சரிக்கை ஒலிக்கிறது” என்று கூறியது. “ஆர்.எஸ்.எஃப் கட்டளை தலைநகர் மற்றும் பிற நகரங்களில் படைகளை அணிதிரட்டி பரப்புவதால் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ