Homeசெய்திகள்உலகம்பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

-

 

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகரான கிம்போவில் இருந்து தென் கிழக்கில் 110 கிலோ மீட்டர் தொலைவில் 68 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

இன்று (ஏப்ரல் 15) காலை 07.00 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அதிர்ந்தனர். இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

எனினும், இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் 6.9 ரிக்டர் அளவுக்கோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அச்சமடைய செய்துள்ளது.

MUST READ