Homeசெய்திகள்உலகம்முதலமைச்சருக்கு எதிராக பா.ம.க... அதானி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சியா?

முதலமைச்சருக்கு எதிராக பா.ம.க… அதானி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சியா?

-

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, இந்த விவகாரத்தில் அதானியை காப்பாற்றும் முயற்சியே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சூரிய மின்சார கொள்முதல் செய்ய 5 மாநில அரசு அதிகாரிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன. எனினும் மத்திய பாஜக அரசு இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது. முன்பு அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டபோது, அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மோடி அரசு காப்பாற்றியது. தற்போது அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிக்கல் வலுத்து வருகிறது.

"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி அறிவிப்பு!
File Photo

இந்த நிலையில் அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் தொழிலதிபர் கவுதம் அதானி கடந்த ஜுலை மாதம் முதலமைச்சரை சந்தித்து பேசியதாகவும், இது குறித்து அவர் விளக்கம் அளிகக வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் ராமதாசுக்குக்கு வேறு வேலை இல்லை என்றும், அதற்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பாமகவும், அதன் கூட்டணி கட்சியானா பாஜகவும் கண்டனம் தெரிவித்தன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கோர வேண்டும் இல்லாவிட்டால் பாமக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாது. விளைவுகள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர்  முதலமைச்சரின் கருத்தில் தவறு ஏதும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் தனது கருத்துக்கு மன்னி கேட்க வலியுறுத்தி சேலத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஏராளமான பாமகவினர் ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

இதனிடையே, குற்றசாட்டுக்கு உள்ளான அதானியை கைது செய்வதை தடுக்கும் விதமாகவே பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திமுகவிற்கு எதிராக போராடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அதானி முறைகேடு செய்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வது தொடர்பாக ஒரு வார்த்தை கூட அன்புமணி ராமதாசோ, பாஜக தலைவர்களோ கூறாத நிலையில், குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர், ராமதாசை அவமதிப்பு செய்துவிட்டார் என இந்த விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே பாமகவினர் போராடி வருவதாக சந்தேகம் எழுகிறது.

மேலும், வன்னியர் சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையான இடஒதுக்கீடு போராளிகளுக்கான நினைவிடம் மற்றும் வன்னிய சமூகத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தராஜனுக்கு விழுப்புரத்தில் திமுக அரசு சார்பில் மணிமண்டம் அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதன் காரணமாக வன்னியர் சமூகத்தினர் மத்தியில் திமுகவின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாகவே முதலமைச்சருக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநில முதலமைச்சர்கள் குறித்து பல முறை அவதுறு வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் என்பதே வரலாறு. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசிய அவர், பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் போட்டியிட்டுள்ளார். இதேபோல், அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,  10 ஆயிரம் பேர் கூட தமிழ்நாட்டில் இல்லை அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்கிறாரகள். நாம் எவ்வளவு பெரிய சமுதாயம் முதலமைச்சராக வரவில்லை என்று கூறியது, பிற சமூகங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேபோல், வன்னியர் சமுகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்து பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதை அவமானமாக கருதுவதாக கூறியிருந்ததும் நினைவு கூரத்தக்கது. முதலமைச்சர் மறுப்பு தெரிவித்ததற்காக மன்னிப்புக் கோர வலியுறுத்தும் பாமக, பாஜக கட்சிகள், அதானி முறைகேடு விவகாரத்தில் குரல் எழுப்பாததது அவர்களை பாதுகாக்கும் முயற்சியே என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

 

MUST READ