spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

-

- Advertisement -

ஒபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன்  நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. செங்கோட்டையனுக்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் செல்வாக்கு இருக்கலாம். ஆனால் கவுண்டர் சமுதாய வாக்குகள் எடப்பாடி வசம் தான் இருக்கிறது. தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய விஷயமாகும். அவர் நீதிமன்றத்திற்கு சென்றால் ஓபிஎஸ் போன்று நடுத்தெருவில் தான் நிற்பார். எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தது முதல் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி உடன் சேர்ந்து மரியாதை  செலுத்தியது வரை தன்னை கட்சியில் இருந்து நீக்கும்படி சவால் விடுத்துக் கொண்டே இருந்தார். எடப்பாடி பழனிசாமியின் கோணத்தில் இருந்து பார்த்தால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. செங்கோட்டையன் நீக்கம் என்பது ஓபிஎஸ், டிடிவி, சசிகலா நீக்கியதால் ஏற்படும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேர் எடப்பாடியை சந்தித்து பேசினார்கள். இன்றைக்கு செங்கோட்டையன் நீக்கப்பட்டபோது ஏன் அவர்களில் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

செங்கோட்டையனை நான் தான் அமைச்சர் ஆக்கினேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் சசிகலா சொல்லி தான் அவரை அமைச்சர் ஆக்கினார் என்பதை எடப்பாடி சொல்லவில்லை. செங்கோட்டையன், ஒபிஎஸ், டிடிவி ஆகியோரை திமுகவின் பி டீம் என்று எடப்பாடி குற்றம்சாட்டுகிறார். இது மிகவும் சலித்துப்போன வார்த்தையாகும். 53 வருஷமாக கட்சியின் உறுப்பினராக இருந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் இருந்தவர். கட்சியை விட்டு நீக்கிய பின்னர், எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டுமானாலும் குற்றம்சாட்டலாம். செங்கோட்டையனுக்கு 2 முறை தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும் கட்சிக்காக விட்டுக் கொடுத்ததாக சொல்கிறார். அவரால் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது. காரணம் அவருடைய குணநலன் அப்படி. 2026 தேர்தலில் அதிமுக தோற்றால் எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். தேர்தல் வெற்றிகள் தான் இதை தீர்மானிக்கும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஏதேனும் கொள்கை முரண்பாடு உள்ளதா? எடப்பாடியின் தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் சவால் விடுகிறார்கள்.

eps ops

ஜெயலலிதா 1996 – 2006 முதல் செங்கோட்டையனை ஓரம் கட்டிய போதும் அவருடைய ஆட்களை ஓரம்கட்டவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பொறுப்புகளை பறித்துவிட்டார். செங்கோட்டையனுடைய அரசியல் தளத்தை சசிகலாவோ, செங்கோட்டையனோ தொந்தரவு செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி செய்கிறார். இதெல்லாம் சரியா, தவறா என்பது தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். எடப்பாடி, பாஜகவுக்கும் துரோகம் செய்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கிறார். இப்படி எதற்காக பாஜகவை அழைக்கிறார் என்றால், தன்னை காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்புகிறார். என்னை பொருத்தவரை எடப்பாடி விஷயத்தில் பாஜக தலையிடாது என்று தான் நினைக்கிறேன். கட்சியில் இருந்து எல்லோரையும் நீக்கி எடப்பாடி தவறு செய்கிறார். ஆனால், தற்போதுள்ள 5 பேரில் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அடுத்தக்கட்டம் மோசமாகும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இப்படி செய்வது அதிமுகவுக்கு பலவீனமாகும்.

சசிகலா - செங்கோட்டையன்

டிடிவி, ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு வாக்கு கிடைக்காது என்பது உறுதியாகிறது. அவர்களை பொருத்தவரை அதிமுக ஆட்சி அமைவதைவிட எடப்பாடி பழனிசாமி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் முக்கியமாகும். திமுக மீண்டும் வந்தால் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். அதிமுக, விஜய் உடன் கூட்டணி அமைத்தாலும், அமைக்கவிட்டாலும் டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் 30 தொகுதிகள் வரை வாக்குகளை உடைப்பார்கள். ஓபிஎஸ் முதல் செங்கோட்டையன் நீக்கம் வரை அதிமுகவுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும். எனவே பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது தான் அதிமுக தலைமையின் பிரதான வேலையாக இருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியின் போக்கை பார்க்கும்போது, நாம் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. கட்சியை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிரிந்தபோது ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டது. பின்னர் ஜானகி, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். 1991ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது அனைத்து தரப்பினருக்கும் ஜெயலலிதா பதவிகளை வழங்கினார். அதைவிடவா இவர்கள் பேசிவிட்டனர். ஒரு தலைவருக்கு அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பழிவாங்கக் கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ