spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

செங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சொல்லித்தான், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை சொன்னார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-ஏட செங்கோட்டையன்,  ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக மரியாதை செலுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பழிவாங்குவதாக குற்றம்சாட்டப்படுகிற நிலையில், அந்த சமுதாய மக்கள் லட்சக்கணக்கான கூடுகிற ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் தைரியமாக சென்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று சொன்னதற்கே செங்கோட்டையனிடம் இருந்த கட்சி பதவிகளை எல்லாம் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு அவரால் துரோகிகள் என்று சொல்லப்படுகிற ஓபிஎஸ்,டிடிவி உடன் ஒரே காரில் பயணிக்கிறார் என்றால் எடப்பாடி எந்த அளவுக்கு கோபப்படுவார் என்பதை அறியாதவர் அல்ல செங்கோட்டையன். அப்போது என்ன முடிவு வந்தாலும் நான் எதிர்கொள்ள தயார் என்கிற முடிவோடு தான் ஓபிஎஸ் காரில் ஏறியுள்ளார். அந்த இடத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் காத்திருந்து சசிகலாவை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவர்களை களைகள் என்று பேசியுள்ளார். அப்படி எல்லாம் துணிச்சலாக பேசிவிட்டு, தான் தலைமை தாங்குகிற கட்சிக்கு வெற்றியை தேடி கொடுத்திருந்தார் என்றால் இன்றைக்கு எங்கேயே போயிருப்பார்.

கடந்த இரண்டு தேர்தல்களில் பெரிய தோல்வியை சந்தித்துவிட்டு மூன்றாவது தேர்தலிலும் நான் அப்படிதான் இருப்பேன் என்றால் அது அசட்டு துணிச்சல் தான். அந்தியூர் தொகுதியில் தோற்றதற்கு செங்கோட்டையன்தான் காரணம் என்கிறார். ஆனால் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரிய வெற்றியை பெற்றதற்கு அவரும் ஒரு காரணமாகும்.  தினகரனுடன் சந்தித்ததாக செய்தி வெளியானபோது அதை உடனடியாக மறுத்த செங்கோட்டையன், இன்றைக்கு அதே அவருடன் சேர்ந்து துணிச்சலாக பேட்டி அளிக்கிறார். அவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது என்று ஓரளவுக்கு யூகிக்கலாம். ஒன்று தனித்து நிற்கலாம். விஜய் குறித்து தினகரன் தொடர்ச்சியாக பேசி வரும் நிலையில், அவருடைய அணியில் சேரவும் வாய்ப்பு உள்ளது. அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து விஜய் என்கிற பிரபலம் களத்திற்கு வருகிறபோது, அவரை அதிமுக கூட்டணிக்குள் இழுத்தாலும் அவரால் கிடைக்கப் போகும் பலன் என்பது அதிமுக வாக்கு வங்கிதான் மீண்டும் வரப் போகிறது. புது வாக்கு வங்கி எங்கே? இருக்கிறது. எதிர்காலத்தை மனதில் வைத்துதான் ஒரு தலைவன் முடிவு எடுக்க வேண்டும்.

EPS is ready to accept a Vijay-led alliance - TTV Dhinakaran

அதிமுக, தவெக இடையே கூட்டணி பேச்சுவர்த்தை நடைபெறவில்லை என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், விஜய் உங்கள் கூட்டணிக்கு வருவாரா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. அப்போது விஜயை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எல்லோரும் எல்லோருடனும் பேசுவோம் என்று சொல்கிறார். விசாரணையை நடத்துகிற சிபிஐ கைவசம் வைத்திருப்பது பாஜக தான். அவர்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்களா? அது எடப்பாடிக்கு தெரியவில்லையா? அல்லது உண்மையாகவே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று பாஜகவை மையப்படுத்தி எடப்பாடி காத்திருக்கிறார். பெரிய வாக்கு வங்கி இருப்பதாக நம்பப் படுகிற ஒரு கட்சி கூட்டணிக்கு வந்தால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதைவிட்டால் வேறு வாய்ப்பு இல்லை. பாமகவில் அன்புமணி, ராமதாஸ் என இருவரும் வந்தாலும் பழைய பலம் இருக்காது. தேமுதிக வழக்கமாக இருந்த கட்சிதான். வாக்கு வங்கி உள்ள கட்சிகள் வேறு கிடையாது.

எடப்பாடியை மாற்றாமல் என்டிஏ கூட்டணிக்கு வர மாட்டேன் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். அப்போது அது நடக்காமல் அவர் என்டிஏவுக்குள் செல்ல மாட்டார். தினகரனுக்காக எடப்பாடியை காவு கொடுப்பார்களா? அமித்ஷா தற்போது வரை அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று சொல்கிறார். எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை பாஜக கூட்டத்தில் பேசியதே, உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லித்தான். அதை அண்ணாமலையே வெளிப்படுத்தி உள்ளார். அப்படி அண்ணாமலையிடம் சொல்லி பேச சொல்கிற அமித்ஷா, அவரே சொல்லாமல் இருப்பது ஏன்? கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் பாஜக செய்தவற்றை பார்க்கிறபோது, அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் இணைப்பு அதிமுகவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் திமுக அணி அதே உருவில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இப்போதே முடிவுக்கு வர வேண்டாம்.

மதுரை விமான நிலையத்திற்கு, தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கை வைப்பதால் முக்குலத்தோர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை எடப்பாடி இப்படி செய்துவிட்டாரே என்கிற காயம் அவர்களுக்குள் இருக்கிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்ததால் இப்படி சொல்கிறோம். அதிமுக டெபாசிட் இழந்த 7 தொகுதிகளில்  4 தொகுதிகள் அவர்கள் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள் என்பதால் இதை ஆதரமாக சொல்கிறோம். டெபாசிட் போகும் அளவுக்கு எடப்பாடிக்கு பாடம் புகட்ட முக்குலத்தோர் மக்கள் தயாராகிவிட்டனர். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக வாக்கு வங்கியின் அடித்தளமாக இருந்தவர்கள் முக்குலத்தோர் மக்கள் தான். அந்த மக்கள் டெபாசிட் போகும் அளவுக்கு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர் என்பதால், எடப்பாடி பழனிசாமி சற்று எச்சரிக்கையாக வேண்டும் என்று சொல்கிறோம். 6 முன்னாள் அமைச்சர்கள் போய் சொன்னதே அதை தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ