Homeசெய்திகள்உலகம்அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!

அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!

-

 

அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!
File Photo

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், தங்கள் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, தேவையைப் பூர்த்திச் செய்ய பாசுமதி இல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா, கடந்த ஜூலை 20- ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே, பணவீக்க உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்கு இந்தியாவின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், சிங்கப்பூர் உணவுக் கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தாடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

இது தொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ