சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 20 ஆம் தேதிக்கு மேல் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 9 மாதங்களாக நிலைத்திருந்த இந்திய வம்சாவளி விண்வெளியாளர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்ப தயாராகி வருகின்றனர். அவர்களை அழைத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், போயிங் ஸ்டார்லைனர் மூலம் அவர்கள் 10 நாட்கள் பயணத்திற்காக விண்வெளிக்குப் புறப்பட்டனர். இருப்பினும், அந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால், அவர்கள் நீண்ட காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க நேரிட்டது.
இந்நிலையில், மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்த அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டுடன் டிரான் விண்கலம் ஏவப்பட்டது. எதிர்பார்ப்பின்படி, விண்கலம் பணியை முடித்து, விரைவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என ஏதிர்ப்பார்க்கப் படுகிறது.