கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு அதிகப்படியாக கனடாவில் வேலை செய்துவரும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.
கனடாவில், கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதனால் உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் கனடாவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இப்படி வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருவதால் தங்கள் நாட்டினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நாட்டு அரசு கருதுகிறது.
அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ” கனடாவில் குறைந்த ஊதியம், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கிறோம். தொழிலாளர்கள் சந்தை மாறிவிட்டது. கனடா தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எங்கள் நாடு முதலீடு செய்வதற்கான நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.