அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள நிலையில், இதன் காரணமாக உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. 
ஈரான் அரசு தனது காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்கவில்லை என்றால், அந்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் கடுமையாகத் தாக்குவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே வேளையில், இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கவலைகள் சாமானிய மக்களைத் தொடர்ந்து வாட்டி வதைக்கின்றன.

“ஈரானில் வரும் செவ்வாய்க்கிழமை ‘மின் உற்பத்தி நிலையம் மற்றும் ‘பாலங்கள் என அனைத்தும் ஒரே நாளில் அழக்கப்படும் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலுடன் இந்தப் போர் தொடங்கியது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; உலகளாவிய சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டு, எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, புது தில்லியில் புதிய எல்பிஜி விநியோக விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் பேச்சுவார்த்தையாளர் கமல் கராசி (Kamal Kharazi), அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
