spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி - கொண்டாட்ட விழாவில் A.R.ரகுமான் நிகழ்ச்சி

அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி – கொண்டாட்ட விழாவில் A.R.ரகுமான் நிகழ்ச்சி

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வானதை கொண்டாடும் விழாவில் இசையமைப்பாளர் A.R.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார் என்று ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் (AAPI) அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டி - கொண்டாட்ட விழாவில் A.R.ரகுமான் நிகழ்ச்சி

we-r-hiring

 

இதுகுறித்து ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம்(AAPI), நேற்று அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில்: ஏ.ஆர். ரஹ்மானுடன் இரு சிறப்பான மாலைப் பொழுது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு தருணத்தை ஏ.ஆர். ரஹ்மானுடன், உலகத்தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாடுங்கள்” என பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட நிகழ்ச்சி வீடியோவை A.R.ரகுமான் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா?…. ஜெயம் ரவியின் பதில்!

நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கான பதிவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணைப்பை ஏஏபிஐ வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ