Homeசெய்திகள்நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து... உயிருடன் வந்த யோகா டீச்சர்

நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து… உயிருடன் வந்த யோகா டீச்சர்

-

- Advertisement -

கர்நாடக மாநிலம், சிக்பல்லாபூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. பெண் யோகா ஆசிரியையை கடத்தி கொலை செய்ய முயற்சி நடந்தும் அந்த பெண் தாக்கியவரை ஏமாற்றி உயிர் தப்பியுள்ளார்.

34 வயதான யோகா ஆசிரியர் கடத்தப்பட்டு 30 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அங்கு அவரது உடைகள் கழற்றப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை கடத்தல்காரர்கள் கழுத்தை நெரித்து கொன்றனர். ஆனால் யோகா ஆசிரியை தனது ஞானத்தாலும், மூச்சை அடக்கும் நுட்பத்தாலும் அவரது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டதாக நினைத்து கடத்தல்காரர்கள், குழி தோண்டி அதில் புதைத்துள்ளனர். அதற்கு முன் அவசரத்தில் அந்தப் பெண் மீது சேற்றை ஊற்றி நகைகளை எடுத்துக்கொண்டுள்ளனர். அங்கிருந்து மாபாதகர்கள் ஓடிவிட, பெண் யோகா ஆசிரியை குழியில் இருந்து வெளியே வந்துள்ளார். அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு துணிகளை வாங்கி உடுத்திக் கொண்டு ஒரு நாள் கழித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தனக்கு நடந்த அநியாயம் குறித்து போலீசிலும் புகார் செய்தார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நான்கு ஆண்கள், ஒரு பெண் மற்றும் சிறுவன் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் பிந்துவின் (27) விருப்பத்தின் பேரில் யோகா ஆசிரியர் கடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யோகா ஆசிரியருடன் தனது கணவர் சந்தோஷ் குமாருடன் நெருக்கம் இருப்பதாக பிந்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் தனியார் விசாரணை நிறுவனத்தை நடத்தி வரும் தனது நண்பரான சதீஷ் ரெட்டியிடம் யோகா ஆசிரியை கண்காணிக்கும்படி பிந்து கேட்டுக் கொண்டுள்ளார்.

யோகா கற்றுக்கொள்ளச் சென்றபோது பெண் யோகா ஆசிரியருடன் சதீஷூக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 23 அன்று, அவர் காலை 10:30 மணியளவில் யோகா ஆசிரியையை தனது வீட்டிற்கு அருகே துப்பாக்கி சுடும் போட்டிக்கு வருமாறு சதீஷ் அழைப்பதாக பிந்து தரப்பில் இருந்து யோகா ஆசிரியையை அழைத்துள்ளனர். அதை நம்பிய அவர் தனது காரில் கிளம்பியுள்ளார்.

அவர் கார் கிளம்பியபோது திடீரென ​​மூன்று ஆண்களும் ஒரு சிறுவனும் காரில் ஏறியுள்ளனர். அதன்பின் நேராக சித்தலகட்டா தாலுக்காவில் உள்ள தனுமிட்டனஹள்ளி வனப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு யோகா ஆசிரியையை மிரட்டி, ஆடைகளை கழற்றி, மானபங்கம் செய்துள்ளனர். பின்னர் அவரை கேபிள் வயரால் கழுத்தை நெரிக்க முயன்றனர்.

யோகா ஆசிரியை தமன்னா தனக்கு நடந்தது குறித்து போலீசாரிடம் கூறுகையில், ‘‘யோகாவின் ஒரு பகுதியாக எனது மன நிலையும், மூச்சை அடக்கும் திறனும் எனது உயிரைக் காப்பாற்றியது. தரையில் விழுந்ததால், கடத்தல்காரர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்தனர். என் நகைகளை வெளியே எடுத்து ஒரு குழியில் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிந்து, சதீஷ் ரெட்டி (40), ரமணா (34), நாகேந்திர ரெட்டி (35), ரவிச்சந்திரா (27) மற்றும் மைனர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சதீஷ், ரமணா மற்றும் நாகேந்திரா ஆந்திராவை சேர்ந்தவர்கள். ரவிச்சந்திரா மற்றும் சிறுவன் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

MUST READ