தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை தனுஷ் இயக்க அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஓம் பிரகாஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 100 கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக இன்று இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களும் படத்தைக் காண ஆவலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் திரண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.
Congratulations on the 50th film @dhanushkraja . Wishing you huge success for your relentless hard work and passion for cinema! Heartfelt Best wishes to the team of #Raayan!@arrahman @sunpictures @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj…
— Karthi (@Karthi_Offl) July 25, 2024
அதன் பின்னர் ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தனுஷின் 50வது படத்திற்கு வாழ்த்துக்கள். உங்களின் அயராத உழைப்பிற்கும் சினிமா மீதான நீங்கள் கொண்ட ஆர்வத்திற்கும் இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். மேலும் ராயன் பட குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


