தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்களுக்கு பிறகு கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் தொடங்கிய நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்குகிறது.
இதில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ஊட்டியில் இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


