சாத்துக்குடி என்பது சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.
சாத்துக்குடி பழங்கள் இயல்பிலேயே இனிப்பு சுவையும் புளிப்பு சுவையும் கொண்டது. அதேசமயம் இந்த சாத்துக்குடியில் 90 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது. மேலும் இந்த சாத்துக்குடியில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. இதன் காரணமாக தான் காய்ச்சல் சமயத்திலும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் இது சிறுநீர் தொற்று பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. ஆகவே சாத்துக்குடி ஜூஸ் அடிக்கடி பருகுவது உடல் நலத்திற்கு நல்லது.

அதே சமயம் இந்த சாத்துக்குடி சருமத்திற்கும் நன்மை பயக்கின்றன. சாத்துக்குடி ஜூஸை குடிப்பது மட்டுமல்லாமல் அந்த சாத்துக்குடியில் ஃபேஷியல் செய்தால் சரும பிரச்சனைகள் தீரும்.
கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு ஃபேஷியல் செய்வதைவிட இது போன்ற இயற்கை முறையில் ஃபேஷியல் செய்தால் சருமத்திற்கு எந்தவித பிரச்சனையும் உண்டாகாது. ஏற்கனவே சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் முகப்பருக்கள் போன்றவை குணமாகும். அதேசமயம் சாத்துக்குடியில் ஃபேஷியல் செய்வதனாலும் சருமத்தில் படியும் கறைகள் நீங்கும். எனவே நீங்களும் பியூட்டி பார்லர் சென்று நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காமல் ஒரே ஒரு முறை
சாத்துக்குடியில் ஃபேஷியல் செய்து பாருங்கள் . இருப்பினும் இதன்மூலம் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.