Homeசெய்திகள்இந்தியாசெபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? - ராகுல்காந்தி கேள்வி

செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? – ராகுல்காந்தி கேள்வி

-

- Advertisement -

அதானி நிறுவனத்துடன் செபி அமைப்பின் தலைவருக்கு தொடர்பு என அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டியுள்ள நிலையில், செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் பங்குச்சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Something big soon India" இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

முதலீட்டாளர்கள் சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், யார் பொறுப்பேற்பார்கள்? – பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது அதானியா? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்
அதானி குழுமத்திற்கு எதிரான தீவிர குற்றச்சாட்டு என்பதால், அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு எந்த சமரசமும் மேற்கொள்ளக்கூடாது என்று ராகுலகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 

 

MUST READ