Homeசெய்திகள்க்ரைம்அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது

அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது

-

- Advertisement -

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைது நான்கு செல்போன் பறிமுதல்.

அமைச்சர் வருகையின் போது கூட்டத்தில் செல்போன் திருடிய இருவர் கைதுகலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டு விழாவிற்கு நேற்று வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்றபோது அங்கு கூட்டத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது.

செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்ற போது பொதுமக்கள் கூச்சலிட அருகில் இருந்த போலீசார் துரத்தி பிடித்து இருவரையும் கைது செய்தனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்த அண்ணா சதுக்கம் போலீசார் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ