spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து... 3 ராணுவ வீரர் மரணம்

அருணாச்சலில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து… 3 ராணுவ வீரர் மரணம்

-

- Advertisement -

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்களை அழைத்துச்சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிஜோவில் இருந்து, லெபரடா மாவட்டம் பாசோர் பகுதிக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை சுபன்சிரி மாவட்டம் தபி கிராமம் அருகே மலைப்பகுதியில் சென்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

we-r-hiring
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
 

இதில் ஹவில்தார் நக்கத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருணாச்சல் விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு கிழக்கு ராணுவ தளபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

MUST READ