spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திருப்பதி லட்டை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

திருப்பதி லட்டை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

-

- Advertisement -

திருப்பதி லட்டை மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்தினால் பெருமாளே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தை காக்கும் நடைப்பயணம் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது,

இதில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிட்டர் அல்போன்ஸ் கலந்துக்கொண்டு காந்தி வேடமிட்ட நபருடன் காந்தியின் மதசார்பற்ற கொள்கைகளை விளக்கும் விதமாக முக்கிய வீதிகள் வழியாக நடைப்பயணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது:- நாடெங்கும் பாஜக எடுத்துவைத்த பாசிச வகுப்புவாத ஆயுதத்தின் கூர்மை ஓவ்வொரு நாளும் மங்கிவருகிறது, மோடியின் மதசாய அரசியல் சாயம் வெளுத்து மோடியின் பாஜக முகம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

நாடு இனிமே மதவாத பாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்ளாது, மதசார்பற்ற ஆட்சிதான் நிலையான பொருளாதாரத்திற்கு அழைத்துசெல்லும் என்பதை உணர்ந்துள்ளனர், அண்டை நாடான பாகிஸ்தான் போன்ற மதசார்புடைய நாடுகளின் நிலையே எடுத்து காட்டாக உள்ளது என்றார்.

சனாதனம் என்பதைப்பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, நாம் புரிந்துகொண்டது ஏற்றத்தாழ்வு அற்ற, சாதி பேதம்மின்றி, உயர்வு தாழ்வு இன்றி அனைத்து பிறப்புகளும் மதிப்பது தான் நமது பண்பு, கோயம்புத்தூரிலே விஸ்வகர்மா சமுகத்தை குலத்தொழிலுடன் சேர்த்து பேசுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது,

திருப்பதி லட்டு விஷயத்தில் மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்துவதை பெருமாளே ஏற்றுக்கொள்ளமாட்டார், தவறு செய்து இருந்தால் தகுந்த தண்டணை வழங்க காங்கிரஸ் கட்சியும் கேட்டுக்கொள்கிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

MUST READ