spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைடிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார் 

டிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார் 

-

- Advertisement -

டிராவல்ஸ் துறையின் முன்னோடி வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.

டிரவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார் பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர். இவர்  சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையில் தங்குவதற்கு வீடில்லாமல் பசியினால் தவித்து வந்த அவர் அயராமல் தொடர்ந்து வேலை தேடி வந்தார். பல இடங்களிலும் வேலைகளுக்காக முயற்சி செய்து அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

we-r-hiring

மனம் தளராமல் முயற்சி செய்த அவர் பின்னர் விசாவுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வோருக்காக முன்பாகவே சென்று இடம் பிடித்து கொடுத்து முதலில் சிறிய அளவில் பணம் சம்பாதிக்க தொடங்கினார்.

தங்குவதற்கு வீடில்லாமல் பசியினால் தவித்து வந்த வி.கே.டி. பாலனின் வாழ்க்கை அப்போது தான்  மாற்றத்தை கண்டது. பின்னர் அங்கு தான் அவருக்கு டிராவல்ஸ் துறையை சேர்ந்த பலரின் தொடர்பும்  கிடைத்துள்ளது. அப்படி கிடைத்த தொடர்புகள் மூலம் 1986-ம் ஆண்டு மதுரா டிராவல்ஸ் லிமிடெட் சர்வீஸை தொடங்கி உள்ளார். இன்று டிராவல்ஸ் துறையின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார்.

பயண சுற்றுலாத் துறையின் முன்னோடியாக விளங்கிய இவர், தொழில்முனைவோர் பலருக்கும் ஊக்கமளித்து வந்தார். இவருடைய பணிகளை கெளரவிக்கும் விதமாய் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.பாலனின் வாழ்க்கை பலருக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

பாலனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது இறுதிச் சடங்கு மந்தவெளியில்  நடைபெறுகிறது.

இதுவரை பெய்த மழை ட்ரெய்லர்தான்.. சென்னைக்கு இனிதான் இருக்கு மெயின் பிக்சர்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்..

MUST READ