spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்... எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்… எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் அண்மையில் பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்துரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு தெலுங்கு அமைப்புகள் அவர் மீது போலிசில் புகார் அளித்தன. அதன் பேரில் எழும்பூர் காவல்துறையினர் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

we-r-hiring

நடிகை கஸ்தூரி

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலிசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கஸ்தூரி ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நடிகை கஸ்தூரி

இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. கஸ்தூரியின் குழந்தை உடல் நலத்தை கருத்தில் கொண்டும், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவல்துறை சார்பில் ஜாமீன் வழங்க எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ