‘தமிழ் சினிமா உலகின் சீமான் தான் சிவகார்த்திகேயன்’. அதாவது தன்னைப் பற்றிய பரபரப்புக்காக, உண்மையே இல்லாத விஷயங்களை ஓவர் கெத்தாக அடித்து விடுகிறார். அரசியலில் சீமான் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாரோ அதைத்தான் சினிமாவில் சிவகார்த்தி பண்ணிட்டிருக்கார் என்று இந்த ஸ்பாயிலருக்கு விளக்கம் கொடுத்து தெறிக்க விடுகிறார்கள்.


இந்தளவுக்கு மோசமான விமர்சனங்களை சந்திக்குமளவுக்கு சிவகார்த்தி என்ன அப்படி பொய்களை அள்ளிவிட்டுட்டார்? என்று கேட்டால் பெரிய லிஸ்டே நீள்கிறது. அதில் லேட்டஸ்டாக தளபதியை விஜய்தான் தன்னை அடுத்த தளபதியாக்க துடிக்கிறார் எனும் ரேஞ்சுக்கு சிவகார்த்தி பேசியுள்ள ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதாவது, அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கும் நேர்காணல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். அந்தவகையில் ‘கோட்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
“கோட் படத்தில் ஒரு கேமியோ இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார். படப்பிடிப்பு நடக்க துவங்கியபோதே அதை சொல்லியிருந்தார். ஆனால் என்ன சீன் என்றெல்லாம் சொல்லவில்லை. இருவருக்கும் இருக்கும் காட்சிக்கான பேப்பரைப் பார்த்து விஜய் சாரும் மகிழ்ந்திருக்கிறார். கடைசியாக, ஷூட்டிற்கு முந்தய நாள்தான் வெங்கட் பிரபு சீன் பேப்பரை அனுப்பினார்.

அன்றைய தினம் காலையில் ஷூட்டிங் சென்றபோது, ’துப்பாக்கியை கொடுத்து வில்லன் மோகனை ‘பார்த்துக்கோங்க. சுடக்கூடாது’ என்பதுதான் சீன் பேப்பரில் இருந்தது. ஆனால், விஜய் சார்தான் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்று வசனத்தை சேர்த்துப் பேசினார். அது அவரது பெருந்தன்மை. சிலர் சினிமா பொறுப்பை ஒப்படைத்துவிட்டதாக பேசுகின்றனர். நான் அப்படி பார்க்கவில்லை. அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன். விஜய் அவார்ட்ஸில் அவரிடம் இருந்தே ஒருமுறை நான் விருது வாங்கினேன். கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருடன் ஸ்கிரீன் ஷேர் செய்தேன். இது இரண்டையுமே அவரது அன்பாகத்தான் பார்க்கிறேன்” என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
ஆனால், ‘ஸீன் ஸ்க்ரிப்டில் இல்லாத டயலாக்கை விஜய்ணாவேதான் பேசி, துப்பாக்கியை என்னிடம் கொடுத்தார்’ என்று சிவகார்த்தி சொல்வதன் மூலமாக, சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாகும் விஜய், சினிமாவில் தன் இடத்தில் சிவகார்த்திதான் வரவேண்டும் என்று விரும்பித் துடிப்பது போலவும், அதை ஓப்பனாக தன் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கட்டம் போட்டுக் காட்டிடவே இப்படியொரு டயலாக்கை வைத்து, ‘துப்பாக்கியை பிடிங்க சிவா’ என்று தன் இடத்தை அவருக்கு வழங்கியது போலவும் சிவா சொல்றார்.
இது முழுக்க முழுக்க சுய தம்பட்டம், இதில் மட்டுமில்லை சிவகார்த்தியின் பிழைப்பே இதுதான். ஒண்ணு மேடையில் அழுது பரிதாபத்தை வாங்கிக் கட்டுவது அல்லது என்னை ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாரு, அமெரிக்காவுல பைடன் கூப்பிட்டார்னு ஓவராய் உருட்டுவதே அவரது வேலை! குறிப்பா, அமரன் படத்தைப் பார்த்த ராணுவ அதிகாரிகள் சிவகார்த்திக்கு போன் போட்டு ‘நீ தப்பான இடத்துல இருக்குற, எங்க கூட வந்து ஜாயின் பண்ணிடு’ன்னு சொன்னாங்கன்னு விட்டாரு ஒரு கத.
ராணுவ அதிகாரிகளே சிலிர்க்கும் அளவுக்கெல்லாம் அமரன்ல எந்த ஆக்ஷனும் இல்லை, அப்படி எதையும் சிவகார்த்தி பண்ணவும் இல்லை. சொல்லப்போனா அமரன் படத்தின் ரியல் ஹீரோவே சாய்பல்லவிதான். படம் பார்த்த அத்தனை பேரும் சொல்வது இதுதான். உண்மை இப்படியிருக்க, சிவகார்த்தி தன்னைத் தானே பில்ட் அப் பண்ணிக்கிறதுக்காக இப்படி ஓவரா ஏத்தி ஏத்தி பேசுறது அசிங்கமா இருக்குது!

தளபதி கோட் படத்துல அப்படி டயலாக் பேசியது அவரோட பெருந்தன்மை. அந்த அன்போட ஒதுங்கிக்கணும் சிவகார்த்தி. அதைவிட்டுட்டு ‘நான் தான் அடுத்த தளபதி’ன்னு வீணா ஸீன் பண்ண நினைச்சால் அரசியல்ல சீமானுக்கு இன்னைக்கு ஆகியிருக்கிற நிலைதான் சிவாவுக்கு சினிமாவில் நடக்கும். இந்திய சினிமாவுல என்னைக்கும் ஒரேயொரு தளபதி தான், அது விஜய் மட்டுமேதான்” என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.


