spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிராவில் பாஜக வரலாற்று வெற்றி: சைலண்டாக சோலியை முடித்த ஆர்.எஸ்.எஸ்

மகாராஷ்டிராவில் பாஜக வரலாற்று வெற்றி: சைலண்டாக சோலியை முடித்த ஆர்.எஸ்.எஸ்

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றி அசாதாரணமானது… பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 149 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் வெற்றி பெற்றது. இது மகாராஷ்டிராவில் பாஜகவின் சிறந்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

பாஜகவுடன் இணைந்து மஹாயுதி கூட்டணியில் போட்டியிட்ட மற்ற கட்சிகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இந்த வெற்றியில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான மகாயுத்தியை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய சங்பரிவார் தனது முழு பலத்தையும் செலுத்தியது. ஆர்.எஸ்.எஸ் தனது உறுப்பினர்களை களமிறக்கி சைலண்டாக செயல்பட்டு ‘சஜக் ரஹோ’ என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் 60,000 வாக்காளர் கூட்டங்களை நடத்தியது. இது எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளை எதிர்கொள்ள பெரிதும் உதவியது. மகா கூட்டணிக்கு சாதகமாக சூழல் மாறியது.

we-r-hiring

நவம்பர் 6 ஆம் தேதி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ க்கு அளித்த பேட்டியில், இடஒதுக்கீடு, ‘ஓட்டு-ஜிஹாத்’, அரசியலமைப்பு ஒருமைப்பாடு போன்ற விவகாரங்களில் காங்கிரஸ், மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தவறான அறிக்கைகளை மறுக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது. அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த போதிலும், மஹாயுதியின் வெற்றியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கொண்டாடினர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பொதுவாக திரைக்குப் பின்னால் வேலை செய்வது வாடிக்கை. அடுத்த ஆண்டு தனது நிறுவன தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மகாராஷ்டிராவை வெல்வது என்பது அரசியல் மேலாதிக்கம் மட்டுமல்ல, அவரது சித்தாந்த இலக்குகளுடன் இணைந்த அரசாங்கத்தை உறுதி செய்வதாகவும் இருந்தது.

சாதி, சமூகத்தின் அடிப்படையில் இந்து வாக்குகளை பிரிக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் உத்திகளை முறியடிக்கும் நோக்கில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிரிக்க முயன்றவர்கள் தோல்வியடைந்து விட்டதாக ஆர்எஸ்எஸ் சீனியர் ஒருவர் தெரிவித்தார். இந்துக்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் நிராகரித்ததையே இந்த வெற்றி பிரதிபலிக்கிறது. சங்பரிவாரின் இரண்டாவது பெரிய அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. விஹெச்பியின் பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே கூறுகையில், ‘‘எங்களது பிரமாண்டமான பிரச்சாரங்கள் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. எந்தவொரு கட்சியையும் வெளிப்படையாக ஆதரிப்பதைத் தவிர்த்து, விஎச்பி இந்து ஒற்றுமையை வலியுறுத்தியது. வாக்காளர்கள் தங்கள் நலன்களுடன் இணைந்த வேட்பாளர்களை ஆதரிக்குமாறு வலியுறுத்தியது’’என்கிறார்.

MUST READ